Friday, 23 June 2017

கங்கை தாங்கிய ஆறு அக்கினிப் பொறிகள் தான் முருகன்

கங்கை தாங்கிய ஆறு அக்கினிப் பொறிகள் தான் முருகன் - தமிழ் சுபவிவாகம்.காம்

கார்த்திகை விரதம் முருகப் பெருமானைக் குறித்துக் அனுஷ்டிக்கப்படும் விரதம் ஆகும்.

கொழும்பில் இன்று (28) மிக சிறப்பாக கார்த்திகை விரதம் பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம்.

திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும்.

திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர்.

சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர்.

அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.

அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது என்ற வரலாற்று கதையும் உண்டு.

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவரைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்கினிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டார்.

அவர் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகின்ற வரலாற்று கதையும் உண்டு.

இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறு எழுத்தே ஆகும்.

நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

Thursday, 22 June 2017

ஆனி மாத ராசிபலன்கள் - தமிழ் சுபவிவாகம்.காம்

ஆனி மாத ராசிபலன் - தமிழ் சுபவிவாகம்

மேஷம்
அஷ்டமத்துச் சனியால் சாதகமற்ற நிலையை சந்தித்தாலும், ராசிநாதன் செவ்வாயின் நிலை உங்கள் பணியினை எளிதாக முடிக்க துணை நிற்கும். மிகுந்த மன உறுதியோடு செயல்பட்டு வருவீர்கள்.
ஒவ்வொரு செயலிலும் கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதை முன்னரே எதிர்பார்த்து சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் உங்கள் பணிகளை சிரமப்பட்டேனும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள்.
குடும்பச் செலவுகள் அதிகரித்து வருவதைப் போல் தோன்றினாலும் அதற்கேற்ற பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும்.
ஜூன் மாதத்தின் இறுதியில் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். உறவினர்களின் வருகையால் ஒரு சில கலகங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறனை பெற்றிருப்பீர்கள்.
வண்டி, வாகனங்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவினங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை, விருந்து போன்றவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தங்கள் திறமையை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
கலைத்துறையினர் சாதிக்க வாய்ப்புகள் தேடி வரும். விவேகமான செயல்பாட்டின் மூலம் சமாளிக்க வேண்டிய மாதம் இது.
ரிஷபம்
இந்த மாதத்தில் தொழில் ரீதியாக சற்று சிரமம் காண நேரிட்டாலும் இதர விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கக் காண்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பதில் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
தன்னம்பிக்கையுடன் கூடிய தைரியம் உங்கள் காரியங்களுக்குத் துணை நிற்கும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.
அடுத்தவரின் மனம் கவரும் வகையிலான பேச்சுக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும்.
புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பம் ஒன்றினை நிறைவேற்றி வைப்பீர்கள். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகள் தொழில்முறையில் மாதத்தின் முற்பாதியில் தடைகளையும், பிற்பாதியில் கூடுதல் அலைச்சலையும் சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
கலைத்துறையினர் தங்கள் துறையில் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். மாணவர்கள் அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நற்பலன்களைத் தரும் மாதமே.
மிதுனம்
இந்த மாதத்தின் முற்பாதியில் சாதகமான பலன்களைக் கண்டு வரும் உங்களுக்கு பிற்பாதியில் ஒரு சில இடைஞ்சல்கள் உருவாகக் கூடும். நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த நபர் ஒருவர் உங்களை ஏமாற்ற முற்படலாம்.
கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சேமிப்புகள் கரைவது போல் தோன்றினாலும் புதிய சொத்துக்கள் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயல்படுவது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு கால நேரம் ஒத்துழைக்கும்.
மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வந்து சேரும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும்.
மாதத்தின் பிற்பாதியில் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்கள் வழியில் எதிர்பாராத சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
தெரிந்தே அதிக செலவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் தொழில்முறையில் ஒரு சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். பிற்பாதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதம் இது.
கடகம்
இந்த மாதத்தின் முற்பாதியில் கூடுதல் விரயத்திற்கு ஆளானாலும் பிற்பாதியில் நல்ல சம்பாத்தியத்தினைக் காண உள்ளீர்கள். நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும் வரை ஓய்வில்லாமல் அதே சிந்தனையுடன் செயல்பட்டு வருவீர்கள்.
ஒரு பணி முடிந்ததும் அடுத்த பணிக்குத் தயாராகி விடுவது உங்களின் பலமாக இருந்து வருகிறது. ஜூலை மாதத்தில் உங்களின் செயல்திட்டங்கள் நல்லபடியாக நடந்து வரும். அதே நேரத்தில் செயல்திட்டங்களில் பலமாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். புதிய நண்பர்களின் வழியில் கூடுதல் செலவினைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயல்பட வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும்.
புதிய சொத்து ஒன்றினை வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தாயார் வழி உறவினர்கள் முக்கியமான பணியின்போது துணை நிற்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் லேசான மன வருத்தத்தினைத் தரக்கூடும்.
மாணவர்களின் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். கலைத்துறையினர் தொழில்முறையில் தனலாபம் காண்பர். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் போட்டியான சூழலை உணர்வார்கள். சுயதொழில் செய்வோர் மாதத்தின் பிற்பாதியில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சிம்மம்
ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்தாலும் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களையே காண உள்ளீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சார நிலை உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நினைத்த காரியங்கள் எளிதில் நடந்து முடியக் காணும் நீங்கள் ஜூலை மாதத்தில் கூடுதலாக உழைத்து வெற்றி பெற வேண்டியிருக்கும். ஒரு சில விஷயங்களில் மிகுந்த தைரியத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட்டு உடனிருப்போரை ஸ்தம்பிக்கச் செய்வீர்கள். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.
உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவினை சந்திக்க நேரிடும்.
வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார். மாணவர்கள் மனப்பாடப் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். நண்பர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்கெடுத்து செயலாற்ற வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கௌரவம் உயரக் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு சிறப்பான தனலாபம் உண்டாகும். குறிப்பிடத்தகுந்த வெற்றியினைக் காணும் மாதம் இது.
கன்னி
இந்த மாதத்தின் முற்பாதியில் சிறிது சிரமத்தினையும், பிற்பாதியில் சாதகமான பலன்களையும் காண உள்ளீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல் திட்டத்தை சரிசெய்துகொண்டு பணியாற்றி வருவீர்கள்.
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டு வருவீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு நெடுநாளைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.
மாதத்தின் பிற்பாதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, விளையாட்டு போன்ற அம்சங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையால் வெற்றி காண்பர்.
பிள்ளைகளின் வாழ்வியல் முன்னேற்றம் கருதி எதிர்காலத் திட்டம் ஒன்றினை வகுத்து செயல்பட கால நேரம் சாதகமாக அமையும். மாதத்தின் முற்பாதியில் உடல்நிலையில் அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
முக்கியமான முடிவுகளின் போது வாழ்க்கைத்துணையின் ஆலோசனை துணை நிற்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் உண்மையான உழைப்பிற்கான பலனைக் காண்பார்கள். கலைத்துறையினர் அலைந்து திரிந்து தங்கள் காரியத்தை சாதிக்க வேண்டியிருக்கும். லேசான சிரமம் கண்டாலும் நன்மை தரும் மாதமாகவே அமையும்.
துலாம்
சென்ற மாதத்தைப் போலவே இந்த மாதமும் சிறிது சிரமத்திற்கு ஆளாக நேரிடும். ராசிநாதன் சுகிரனின் சாதகமற்ற சஞ்சாரத்தால் நினைத்த காரியங்கள் எளிதில் நடைபெறாத வண்ணம் ஒரு சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் தொடரும்.
குடும்பத்தில் சலசலப்பினை சந்திக்க நேரிடும். பேசும் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு உங்களுக்கு எதிராக சூழலைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
பிரயாணத்தின்போது எதிர்பாராத பொருளிழப்பிற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் ஞாபகமறதித் தொந்தரவால் அவதிக்கு உள்ளாவார்கள். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதாக எண்ணி மனவருத்தம் கொள்வீர்கள்.
சிந்தனையில் சதா ஒருவித குழப்பத்தினை உணர்வீர்கள். சிறுசிறு விஷயங்களில் வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும்.
பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். கலைத்துறையினர் எதிர்பாராத இடைஞ்சல்களை சந்திக்க நேரும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் நற்பெயர் காண்பார்கள். வியாபாரிகள் கூடுதல் அலைச்சலை சந்தித்தாலும், அதற்குரிய தனலாபத்தினை அடைவதில் தடையேதுமிருக்காது. சரிசம பலன்களை காணும் மாதமாக அமையும்.
விருச்சிகம்
இந்த மாதத்தின் துவக்கத்தில் ஒரு சில விஷயங்களில் கலகத்தினையும், பிரச்னையையும் எதிர்கொள்ள நேரிடும். நிதானமான அணுகுமுறையின் மூலம் மட்டுமே வெற்றி காண இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதையும், கொடுக்கல், வாங்கல் விவகாரங்களையும் தவிர்ப்பது நல்லது.
வழக்கு விவகாரங்கள் இழுபறியைத் தரும். ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். பேச்சினில் அறிவுரை நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும்.
உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். பிள்ளைகளின் பெயரில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான கால நேரம் சாதகமாக அமையும். ஜூலை முதல் வாரத்தில் தொலைதூர பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கலைத்துறையினர் தொழில்முறையில் இருந்து வரும் போட்டிகளை தங்களது தனிப்பட்ட அணுகுமுறையின் மூலம் வெற்றி காண்பர்.
உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோருடன் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டியது அவசியம். மாணவர்கள் எழுத்துத்திறனில் கவனம் செலுத்துவது நல்லது. மொத்தத்தில் எல்லா விவகாரங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதம் இது.
தனுசு
ஆனி மாதத்தின் முற்பாதியில் சிறப்பான நற்பலன்களைக் கண்டு வரும் நீங்கள் பிற்பாதியில் சற்று சிரமத்தினைக் காண நேரிடலாம். நினைத்த காரியங்கள் எளிதில் முடியாது சற்று இழுபறியைத் தரக்கூடும்.
ஆயினும் கால நேரத்திற்குத் தகுந்தாற்போல் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருள் வரவு தாமதமானாலும் ஆனி மாத இறுதிக்குள் சிறப்பான நிதி நிலைமையைக் காண்பீர்கள்.
குடும்பத்தில் லேசான சலசலப்பினை சந்திக்க நேரிடும். தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனைத் தரும் வகையில் அமையும்.
தொழில் ரீதியாக பல புதிய நண்பர்களை சந்திக்க நேரிடலாம். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். உறவினர்களால் குடும்பத்தில் சொத்துப்பிரச்னைகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் அதிக ஆர்வம் கொள்வர். பிள்ளைகளின் வாழ்வினில் சுப நிகழ்விற்கான வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் சிறு தடை காண நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வரும் போட்டிகளைக் கடந்து சிறப்பான வெற்றியினைக் காண்பார்கள்.
சுயதொழில் செய்வோருக்கு சிறப்பான தனலாபம் உண்டாகும். முற்பாதியில் நன்மையையும் பிற்பாதியில் அலைச்சலையும் காணும் மாதம் இது.
மகரம்
இந்த மாதத்தில் நீங்கள் செய்ய நினைக்கும் பணிகள் எளிதில் முடியாது சற்று இழுபறியைத் தரக்கூடும். ஒவ்வொரு காரியத்திலும் ஏதேனும் ஒரு வகையில் இடைஞ்சலையோ அல்லது போட்டியான சூழலையோ எதிர்கொள்ள நேரிடலாம். வீண் வம்பு வழக்குகள் வந்து சேரக்கூடும் என்பதால் இயன்ற வரை சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனைத் தரும் வகையில் அமையும்.
வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உறவினர்களால் ஒரு சில விவகாரங்களில் கலகத்தினை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் மத்தியில் பொறாமைக் குணம் அதிகரிக்கக் கூடும்.
உங்கள் பணிகளுக்கு பிள்ளைகளின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும். ஆறாம் இடம் வலுப்பெற்று இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கலாம். பூர்வீக சொத்துக்களில் புதிய வில்லங்கம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
கலைத்துறையினரின் கற்பனைத் திறன் கூடும். வியாபாரிகள் தொழில்முறையில் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். சரிசம பலன்களைக் காணும் மாதமாக அமையும்.
கும்பம்
இந்த மாதத்திய கிரக நிலை உங்கள் மனதில் மகிழ்ச்சியை பூரணமாக இடம்பெறச் செய்யும். நினைத்த காரியங்கள் நியாயமான முறையில் நடைபெறுவதன் மூலம் மன நிம்மதி கொள்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.
வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு கால நேரம் சாதகமாக அமையும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். பிள்ளைகளின் செயல்களில் சுறுசுறுப்பினைக் காண்பீர்கள். சிந்தனைகளில் அவ்வப்போது தோன்றும் குழப்பத்தினைத் தவிர்க்க இயலாது.
ஆயினும் முக்கியமான பணிகளின் போது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கான கால நேரம் கூடி வரும்.
பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். இக்கட்டான சூழ்நிலையில் ஸ்திரீகளின் துணையோடு வெற்றி காண்பீர்கள். தொழில்முறையில் உங்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி வருவீர்கள்.
வியாபாரிகள் சிறப்பான தனலாபம் காணும் நேரம் இது. மாணவர்கள் தொழில்முறைக் கல்வியில் அதிக ஈடுபாடு கொள்வர். கலைத்துறையினர் ஜூலை மாதத்தில் தங்களுக்குரிய அங்கீகாரத்தை அடைவர். சாதகமான நற்பலன்களை விளைவிக்கும் மாதமாக அமையும்.
மீனம்
சற்றே சாதகமற்ற கிரஹ சஞ்சார நிலையை எதிர்கொண்டிருந்தாலும், நேரத்திற்குத் தக்கவாறு உங்கள் பணிகளை மாற்றியமைத்துக்கொண்டு செயலாற்றி வருவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிலையான முடிவெடுக்க இயலாது ஒருவித குழப்பமான மனநிலையை உணர்ந்து வருவீர்கள்.
ஆயினும் மனதின் மூலையில் நம்மால் எதையும் எதிர்கொள்ள இயலும் என்ற தைரியம் தொடர்ந்து இருந்து வரும். இதுநாள் வரை தடைபட்டிருந்த பொருள் வரவு நிலை சீரடையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் சேரும் நேரம் இது. தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த உபயோகத்தினைத் தரும் வகையில் அமையும்.
பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உறவினர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள்.
வாழ்க்கைத்துணை உங்களின் எண்ணத்தினைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருவார். குடும்பப் பெரியோர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உத்யோகஸ்தர்கள் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவி வரும்.
கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சிறிது காலம் காத்திருப்பது நல்லது. சரிசம பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

Saturday, 5 November 2016

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா?

சிக்கலில் எழுந்தருளியுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.நாகை: நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது. இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் போது இன்றைக்கும் முருகனுக்கு வியர்க்கிறது என்பது அதிசயம். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முருகன் சிங்காரவேலவர், வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் முக்கிய நிகழ்ச்சியாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்ற சொல் வழக்கும் உண்டு. 
சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம். இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் தேரில் அலங்கார கோலத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிங்காரவேலவர் தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து காலை 7.30 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து சக்திவேல் வாங்குதல் நடைபெற்றது. சக்தி வேல் வாங்கிய முருகனுக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தியது. 
அதை பட்டுத்துணியில் ஒற்றி எடுத்தனர். இதனையடுத்து வேல்நெடுங்கன்னி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிக்கல் வந்த கதை தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. 
அந்த குளமே இன்று "தேனு தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார். அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இத்தலப் பெருமாள் "கோல வாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார். பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு: முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, "போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்' என வரம் தந்ததோடு, "உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார். ராகுல் காந்தியை கைது செய்தது கண்டனத்துக்குரியது: புதுவை முதல்வர் நாராயணசாமி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு குறைவு.. பெங்களூரில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: தமிழக வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட கோரிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன் Featured Posts அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் "வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் திருநாமம் பெற்றார். அன்னையிடம் வாங்கிய வேல் கொண்டு சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி போரில் வெற்றி பெற்றார் முருகப்பெருமான் என்கிறது கந்த புராணம். நாளைய தினம் சிக்கலில் சிங்கார வேலருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

மிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ வேண்டுமா!

மிகச் சரியாக 90 நாட்களுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழ


நீங்கள் செய்ய‍ வேண்டிய செயல் இதுதான்…
ஏதாவது ஒரு அமாவாசையன்று 50கிராம் பசுநெய் யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
maxresdefault
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வர வேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன்பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத் தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண் டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடி யும்.
உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா? என்பதை மிகச்சரியாக 90 நாட்க ளுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் அந்த அற்புத அதிசயம் என்ன‍ என்பதைநீங்களும் அனுபவப் பூர்வ மாக உணர்ந்து பாருங்கள்…
இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்
=> செந்தில் லஷ்மி

12 ராசிகளின் மூலிகையும், சக்கரமும் பயனும், மூலிகையின் அற்புதமும்

ஒவ்வொரு மனிதனும் நல்ல நேரம் வரும் பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல் படும் பொழுதும் கெட்டவையே நடக்கும் எனினும் இராசியை வசியப்படும் அற்புத மூலிகையும் உண்டு என்று சான்று கூறுப்படுகிறது.

இனி 12 இராசிகாரர் பற்றி மூலிகையும் பயனும்


1. மேசம் :- [ அசுவனி-4பா + பரணி + 4 பாத கிருத்-] 9
வணங்க வேண்டய எந்திரம் :- பால ஷ்ண்மக ஷடாஷர
மூலிகை :- வைகுண்ட மூலிகை


2.ரிஷபம் :- [கிருத் - 3 பாத, ரோஹினி 4 பா + மிருக சீவிடம் 2 பா 9]
எந்திரம் :- ஹி மஹாலட்சுமி எந்திரம்
மூலிகை :- அம்மான் மூலிகை

3.மிதுனம் :- [மிருக-உபாத + திருவாது + 4 பாத +புனர் புனர் -3 9 பாத]
எந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன யந்திரம்
மூலிகை :- அற்ற இலை ஒட்டி
4. கட்கம் :-[புனர் பூரம் - 1 பாத + பூசம் 4 பாத +ஆயுல் + பாத ] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ துர்கா யந்திரம்
மூலிகை :- நத்தை சூரி மூலிகை
5.சிம்மம :-[ மகம் 4 பாத + பூசம் 4 பாத + உத்திரம் 1 பாத] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம்
மூலிகை :- ஸ்ரீ விஷ்ணு மூலி
6.கன்னி :- [ உத்திரம் 3 பாத + அஸ்தம்- 4 பாத + சித்து 2 பாத] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்
மூலிகை :- துளசி
7. துலாம் :- [ சித்தி 2 பாத + சுவாதி 4 பாத + விசாக 3 பாத] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம்
மூலிகை :- செந்நாயுருவி
8.விருட்சகம் :-[விராக 1 பாத + அனுஷம் 4 பாத + கேட்டை 4 பாத] 9 பாத
எந்திரம் :- பால சண்முக ஷாடத்ச்சர எந்திரம்
மூலிகை :- மஞ்சை கிளுகிளிப்பை
9.தனுசு :- [மூலம் 4 பாத + பூராடம் 4 பாத + உத்திராடம் 1 பாத] 9 பாத
எந்திரம் :- தன சக்ர யந்திரம்
மூலிகை :- சிவஞர் மூலி
10.மகரம் :-[ உத்திராடம் 3 பாத + திருவோ 4 பாத +அவிட்,உபாத ] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ பைரவ யந்திரம்
மூலிகை :- யானை வணங்கி
11.கும்பம் :- [அவிட்உபாத +சதயம் 4 பாத + புராட்டாது 3 பாத] 9 பாத
எந்திரம் :- ஸ்ரீ கணபதி யந்திரம்
மூலிகை :- தகரை மூலிகை
12.மீனம் :- [புரட்டாது 1 பாத + உத்தி 4 பாத + ரேவதி 4 பாத]
எந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம்
மூலிகை :- குப்பை மேனி


Sunday, 24 July 2016

இன்றைய ராசி பலன் 25/07/2016, மேஷம் – மீனம், உங்கள் ராசி என்ன சொல்லுதுன்னு பாருங்கள்!


மேஷம்: சுயநல நோக்கில் சிலர் உதவ முன்வருவர். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உண்டாகும். அளவான பண வரவு கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை.
ரிஷபம்: நல்லவர்களின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் தாராள வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்
மிதுனம்: குடும்ப பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். சராசரி பண வரவுடன் நிலுவை பணமும் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.
கடகம்: குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.
சிம்மம்: சிலரது பேச்சு சங்கடத்திற்கு ஆளாக்கலாம். தொழில் வியாபாரத்தில் சராசரி பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

கன்னி: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள வருமானம் கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: நண்பருக்கு தேவையான உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிக வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
விருச்சிகம்: சொந்த விஷயம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு செலவுக்கான பணத் தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் கவனமாக இருக்கவும்.
தனுசு: நண்பரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மகரம்: பகைவரும் அன்பு பாராட்டுகிற நல்ல சூழல் உருவாகும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
கும்பம்: பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறையில் சுமுக நிலை இருக்கும். லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம்.
மீனம்: பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பண வரவு அதிகரிக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

குரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?

குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது.

குரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா? - Tamil Subavivaham.com


குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும்.

நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்டு மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18 ம் நாள், அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடைகின்றனர்.

மேலும், குரு வழிபாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறுகிறது. குரு பலம் இருந்தால்… சகல யோகமும் பெறலாம் என்பார்கள். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான்.குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். அறிவு உடைய குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான். நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான்.

இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ,சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை.

வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும். குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும்.

நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார். குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள். குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும்.

அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும். குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும். குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம்.

நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும். குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும்.

மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வதை இல்லாமல் உடனே போகும். குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும்.

மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார். குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும்.

மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும். குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார்.

குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும். குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும்.

வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
எங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.

இலவச பதிவு - http://www.tamilsubavivaham.com/register