Sunday 17 July 2016

யோகா - வாழ்வியல் கலை தரும் யோகம்!

உலக நாடுகள் அனைத்தும் பெருமையுடன் கொண்டாடுவது மட்டுமல்ல கடைபிடித்து வரும் இந்த அற்புதமான வாழ்வியல் கலையை உலகிற்கு வழங்கியது நமது பாரத தேசம்.

தாய் கண்டு கொள்ளாத பிள்ளையை அடுத்தவர்கள் தூக்கி அரவணைத்து கொள்வது போல் இந்திய மக்கள் கைவிட்ட கலையை இன்று உலகம் கையிலெடுத்து கொண்டாடுகிறது.
வழிப்பயணத்தில் ஒரு காட்சியை எல்லோரும் தவறாமல் பார்க்க முடியும். கையில் சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கட்டாயம் வைத்திருப்பார்கள். பலரது வாழ்க்கை மாத்திரைகளின் துணையோடுதான் ஓடிக் கொண்டிருக்கிறது.
மாதம்தோறும் மளிகை பொருட்கள் வாங்குவது போல் மருந்துகளையும் வாங்குகிறார்கள். பல மருந்து கடைகள் இலவச ஹோம் டெலிவரி… குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி என்றெல்லாம் மருந்து விற்பனையிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
sivanandayogavedantameenakshiashram
அந்த அளவுக்கு மக்கள் நோய்களின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். வெளியே போனால் தண்ணீர் ஒத்துக்கொள்வதில்லை. தூசு அவதி அதிகரித்து வருகிறது. மழையில் நனைந்தால் ஜுரம் வருகிறது. வெயிலில் அலைந்தால் தலை வலிக்கிறது. நாற்பது வயதிலேயே 4 படிக்கட்டுகள் கூட ஏற முடியவில்லை.
பிர‌ஷர், சுகர், கால்வலி, கைவலி, மூட்டுவலி, கழுத்துவலி, முதுகுவலி இன்னும் என்னவெல்லாமோ வலிகள் உடலை பாடாய்படுத்துகின்றன.
வருடம்தோறும் ஒரு ‘மாஸ்டர் ஹெல்த் செக்–அப்’ அப்போதும் புதிது புதிதாய் தோன்றும் நோய் அறிகுறிகள்! அதற்காக புதிதாய் மேலும் சில மாத்திரைகள்… இப்படி மாத்திரைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் நோய்… என்ன செய்வது? இது தான் வாழ்க்கை என்று மக்களும் பழகி விட்டார்கள்.
ஆனால் மருந்தில்லா வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ கற்றுக் கொண்டதற்கு காரணம் அவர்கள் கற்று வைத்திருந்த மூச்சு பயிற்சி உள்ளிட்ட யோகாதான் காரணமாக அமைந்தது.
இன்றும் முறைப்படி யோகாசனம் செய்து வருபவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
உலகிற்கே ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்த புண்ணிய பூமி நம் நாடு. இங்கிருந்து தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யோகா கலை உருவாகி இருக்கிறது.
உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருப்பதாகவும் அதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஏற்றவாறு 84 லட்சம் யோகாசன முறைகளை சிவபெருமான் அருளியதாக கூறப்படுகிறது. அதில் 84 யோகாசனங்கள் மனிதர்களுக்கு அத்தியாவசியமானதாக கூறப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு கடவுள் கற்றுத் தந்த கலை. அதனால்தான் ஆன்மீகத்தில் தீவிர பற்றுடையவர்கள் யோகாவையும் முக்கிய பயிற்சியாக எடுத்துக் கொண்டார்கள். சித்தர்களும், முனிவர்களும் தங்கள் யோகா நிலையின் காரணமாகவே அற்புத ஆற்றல் பெற்று விளங்கினார்கள்.
காலப்போக்கில் மேலை நாட்டு நாகரீகத்தின் தாக்கம்– அரசியல் சித்து விளையாட்டுகளால் யோகா, முனிவர்கள் செய்வது! இது இந்து மதம் சார்ந்தது என்று புதிய வர்ணம் பூசி மக்களை அந்த பக்கம் திரும்பவிடாமல் செய்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் விவேகானந்தர் மூலம் பரவிய யோகா கலையின் மகத்துவத்தை புரிந்து கொண்ட அந்த நாடுகள் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டன.
1970களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற ஆன்மீகவாதிகள் மூலம் யோகா வேகமாக பரவியது.
இன்று வெளிநாடுகளில் யோகாவுக்கு இருக்கும் மவுசு இந்தியாவில் இல்லை என்பது வேதனையானது.
தலைவர்கள் பலர் யோகாசனம் செய்து வருகிறார்கள். ஆனால் அதை பரப்புவதில் அக்கறை காட்டாதது துரதிருஷ்டவசமானது.
இந்தியாவில் யோகா கலைக்கு உயிரூட்ட பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டு யோகா தினத்தில் 36 ஆயிரம் பேர் பங்கேற்ற பொது இடத்தில் அவரும் யோகாசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. நாளை அவர் சண்டிகரில் நடக்கும் யோகா முகாமில் பங்கேற்கிறார்.
எல்லோரும் யோகா கற்றுக் கொள்ள வேண்டும் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும். எளிதாக கற்றுக் கொள்ளும் முறையை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் கட்டாயமாக்குவது நல்லது. ஆஸ்பத்திரிகளில் யோகா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் பயிற்சி அளிப்பதில்லை என்பதுதான் உண்மை. நோயாளிகளாக மக்கள் வந்தால்தானே அவர்களுக்கு தொழில் நடக்கும்?
யோகாவை ஒரு சமூக இயக்கமாக மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பெருகிவரும் நோய்களும், ஆஸ்பத்திரிகளும் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்துகின்றன. வளரும் தலைமுறை ஆரோக்கியமானதாக வளர யோகாவை பரப்புவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை ஒவ்வொருவரும் தங்கள் உடல் நிலைக்கு ஏற்ற ஓரிரு யோகாசன பயிற்சிகளை கற்று கொள்வது அவசியம். நோய் வந்து விட்டால் உயிர் பயம் வந்து விடுகிறது. அப்போது நம் கண்களுக்கு எந்த பேதமும் தெரிவதில்லை. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு சென்று விடுகிறோம்.
அதையே வருமுன் காத்துவிட்டால் வாழ்க்கை வசந்தமாகிவிடுமல்லவா!

0 comments:

Post a Comment

எங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.

இலவச பதிவு - http://www.tamilsubavivaham.com/register