Thursday 22 June 2017

ஆனி மாத ராசிபலன்கள் - தமிழ் சுபவிவாகம்.காம்

ஆனி மாத ராசிபலன் - தமிழ் சுபவிவாகம்

மேஷம்
அஷ்டமத்துச் சனியால் சாதகமற்ற நிலையை சந்தித்தாலும், ராசிநாதன் செவ்வாயின் நிலை உங்கள் பணியினை எளிதாக முடிக்க துணை நிற்கும். மிகுந்த மன உறுதியோடு செயல்பட்டு வருவீர்கள்.
ஒவ்வொரு செயலிலும் கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதை முன்னரே எதிர்பார்த்து சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் உங்கள் பணிகளை சிரமப்பட்டேனும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள்.
குடும்பச் செலவுகள் அதிகரித்து வருவதைப் போல் தோன்றினாலும் அதற்கேற்ற பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும்.
ஜூன் மாதத்தின் இறுதியில் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். உறவினர்களின் வருகையால் ஒரு சில கலகங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறனை பெற்றிருப்பீர்கள்.
வண்டி, வாகனங்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவினங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை, விருந்து போன்றவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தங்கள் திறமையை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
கலைத்துறையினர் சாதிக்க வாய்ப்புகள் தேடி வரும். விவேகமான செயல்பாட்டின் மூலம் சமாளிக்க வேண்டிய மாதம் இது.
ரிஷபம்
இந்த மாதத்தில் தொழில் ரீதியாக சற்று சிரமம் காண நேரிட்டாலும் இதர விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கக் காண்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பதில் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
தன்னம்பிக்கையுடன் கூடிய தைரியம் உங்கள் காரியங்களுக்குத் துணை நிற்கும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.
அடுத்தவரின் மனம் கவரும் வகையிலான பேச்சுக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும்.
புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பம் ஒன்றினை நிறைவேற்றி வைப்பீர்கள். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகள் தொழில்முறையில் மாதத்தின் முற்பாதியில் தடைகளையும், பிற்பாதியில் கூடுதல் அலைச்சலையும் சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
கலைத்துறையினர் தங்கள் துறையில் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். மாணவர்கள் அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நற்பலன்களைத் தரும் மாதமே.
மிதுனம்
இந்த மாதத்தின் முற்பாதியில் சாதகமான பலன்களைக் கண்டு வரும் உங்களுக்கு பிற்பாதியில் ஒரு சில இடைஞ்சல்கள் உருவாகக் கூடும். நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த நபர் ஒருவர் உங்களை ஏமாற்ற முற்படலாம்.
கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சேமிப்புகள் கரைவது போல் தோன்றினாலும் புதிய சொத்துக்கள் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயல்படுவது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு கால நேரம் ஒத்துழைக்கும்.
மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வந்து சேரும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும்.
மாதத்தின் பிற்பாதியில் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்கள் வழியில் எதிர்பாராத சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
தெரிந்தே அதிக செலவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் தொழில்முறையில் ஒரு சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். பிற்பாதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதம் இது.
கடகம்
இந்த மாதத்தின் முற்பாதியில் கூடுதல் விரயத்திற்கு ஆளானாலும் பிற்பாதியில் நல்ல சம்பாத்தியத்தினைக் காண உள்ளீர்கள். நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும் வரை ஓய்வில்லாமல் அதே சிந்தனையுடன் செயல்பட்டு வருவீர்கள்.
ஒரு பணி முடிந்ததும் அடுத்த பணிக்குத் தயாராகி விடுவது உங்களின் பலமாக இருந்து வருகிறது. ஜூலை மாதத்தில் உங்களின் செயல்திட்டங்கள் நல்லபடியாக நடந்து வரும். அதே நேரத்தில் செயல்திட்டங்களில் பலமாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். புதிய நண்பர்களின் வழியில் கூடுதல் செலவினைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயல்பட வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும்.
புதிய சொத்து ஒன்றினை வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தாயார் வழி உறவினர்கள் முக்கியமான பணியின்போது துணை நிற்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் லேசான மன வருத்தத்தினைத் தரக்கூடும்.
மாணவர்களின் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். கலைத்துறையினர் தொழில்முறையில் தனலாபம் காண்பர். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் போட்டியான சூழலை உணர்வார்கள். சுயதொழில் செய்வோர் மாதத்தின் பிற்பாதியில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சிம்மம்
ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்தாலும் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களையே காண உள்ளீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சார நிலை உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நினைத்த காரியங்கள் எளிதில் நடந்து முடியக் காணும் நீங்கள் ஜூலை மாதத்தில் கூடுதலாக உழைத்து வெற்றி பெற வேண்டியிருக்கும். ஒரு சில விஷயங்களில் மிகுந்த தைரியத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட்டு உடனிருப்போரை ஸ்தம்பிக்கச் செய்வீர்கள். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.
உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவினை சந்திக்க நேரிடும்.
வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார். மாணவர்கள் மனப்பாடப் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். நண்பர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்கெடுத்து செயலாற்ற வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கௌரவம் உயரக் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு சிறப்பான தனலாபம் உண்டாகும். குறிப்பிடத்தகுந்த வெற்றியினைக் காணும் மாதம் இது.
கன்னி
இந்த மாதத்தின் முற்பாதியில் சிறிது சிரமத்தினையும், பிற்பாதியில் சாதகமான பலன்களையும் காண உள்ளீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல் திட்டத்தை சரிசெய்துகொண்டு பணியாற்றி வருவீர்கள்.
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டு வருவீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு நெடுநாளைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.
மாதத்தின் பிற்பாதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, விளையாட்டு போன்ற அம்சங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையால் வெற்றி காண்பர்.
பிள்ளைகளின் வாழ்வியல் முன்னேற்றம் கருதி எதிர்காலத் திட்டம் ஒன்றினை வகுத்து செயல்பட கால நேரம் சாதகமாக அமையும். மாதத்தின் முற்பாதியில் உடல்நிலையில் அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
முக்கியமான முடிவுகளின் போது வாழ்க்கைத்துணையின் ஆலோசனை துணை நிற்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் உண்மையான உழைப்பிற்கான பலனைக் காண்பார்கள். கலைத்துறையினர் அலைந்து திரிந்து தங்கள் காரியத்தை சாதிக்க வேண்டியிருக்கும். லேசான சிரமம் கண்டாலும் நன்மை தரும் மாதமாகவே அமையும்.
துலாம்
சென்ற மாதத்தைப் போலவே இந்த மாதமும் சிறிது சிரமத்திற்கு ஆளாக நேரிடும். ராசிநாதன் சுகிரனின் சாதகமற்ற சஞ்சாரத்தால் நினைத்த காரியங்கள் எளிதில் நடைபெறாத வண்ணம் ஒரு சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் தொடரும்.
குடும்பத்தில் சலசலப்பினை சந்திக்க நேரிடும். பேசும் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு உங்களுக்கு எதிராக சூழலைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
பிரயாணத்தின்போது எதிர்பாராத பொருளிழப்பிற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் ஞாபகமறதித் தொந்தரவால் அவதிக்கு உள்ளாவார்கள். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதாக எண்ணி மனவருத்தம் கொள்வீர்கள்.
சிந்தனையில் சதா ஒருவித குழப்பத்தினை உணர்வீர்கள். சிறுசிறு விஷயங்களில் வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும்.
பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். கலைத்துறையினர் எதிர்பாராத இடைஞ்சல்களை சந்திக்க நேரும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் நற்பெயர் காண்பார்கள். வியாபாரிகள் கூடுதல் அலைச்சலை சந்தித்தாலும், அதற்குரிய தனலாபத்தினை அடைவதில் தடையேதுமிருக்காது. சரிசம பலன்களை காணும் மாதமாக அமையும்.
விருச்சிகம்
இந்த மாதத்தின் துவக்கத்தில் ஒரு சில விஷயங்களில் கலகத்தினையும், பிரச்னையையும் எதிர்கொள்ள நேரிடும். நிதானமான அணுகுமுறையின் மூலம் மட்டுமே வெற்றி காண இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதையும், கொடுக்கல், வாங்கல் விவகாரங்களையும் தவிர்ப்பது நல்லது.
வழக்கு விவகாரங்கள் இழுபறியைத் தரும். ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். பேச்சினில் அறிவுரை நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும்.
உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். பிள்ளைகளின் பெயரில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான கால நேரம் சாதகமாக அமையும். ஜூலை முதல் வாரத்தில் தொலைதூர பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கலைத்துறையினர் தொழில்முறையில் இருந்து வரும் போட்டிகளை தங்களது தனிப்பட்ட அணுகுமுறையின் மூலம் வெற்றி காண்பர்.
உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோருடன் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டியது அவசியம். மாணவர்கள் எழுத்துத்திறனில் கவனம் செலுத்துவது நல்லது. மொத்தத்தில் எல்லா விவகாரங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதம் இது.
தனுசு
ஆனி மாதத்தின் முற்பாதியில் சிறப்பான நற்பலன்களைக் கண்டு வரும் நீங்கள் பிற்பாதியில் சற்று சிரமத்தினைக் காண நேரிடலாம். நினைத்த காரியங்கள் எளிதில் முடியாது சற்று இழுபறியைத் தரக்கூடும்.
ஆயினும் கால நேரத்திற்குத் தகுந்தாற்போல் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருள் வரவு தாமதமானாலும் ஆனி மாத இறுதிக்குள் சிறப்பான நிதி நிலைமையைக் காண்பீர்கள்.
குடும்பத்தில் லேசான சலசலப்பினை சந்திக்க நேரிடும். தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனைத் தரும் வகையில் அமையும்.
தொழில் ரீதியாக பல புதிய நண்பர்களை சந்திக்க நேரிடலாம். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். உறவினர்களால் குடும்பத்தில் சொத்துப்பிரச்னைகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் அதிக ஆர்வம் கொள்வர். பிள்ளைகளின் வாழ்வினில் சுப நிகழ்விற்கான வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் சிறு தடை காண நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வரும் போட்டிகளைக் கடந்து சிறப்பான வெற்றியினைக் காண்பார்கள்.
சுயதொழில் செய்வோருக்கு சிறப்பான தனலாபம் உண்டாகும். முற்பாதியில் நன்மையையும் பிற்பாதியில் அலைச்சலையும் காணும் மாதம் இது.
மகரம்
இந்த மாதத்தில் நீங்கள் செய்ய நினைக்கும் பணிகள் எளிதில் முடியாது சற்று இழுபறியைத் தரக்கூடும். ஒவ்வொரு காரியத்திலும் ஏதேனும் ஒரு வகையில் இடைஞ்சலையோ அல்லது போட்டியான சூழலையோ எதிர்கொள்ள நேரிடலாம். வீண் வம்பு வழக்குகள் வந்து சேரக்கூடும் என்பதால் இயன்ற வரை சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனைத் தரும் வகையில் அமையும்.
வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உறவினர்களால் ஒரு சில விவகாரங்களில் கலகத்தினை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் மத்தியில் பொறாமைக் குணம் அதிகரிக்கக் கூடும்.
உங்கள் பணிகளுக்கு பிள்ளைகளின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும். ஆறாம் இடம் வலுப்பெற்று இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கலாம். பூர்வீக சொத்துக்களில் புதிய வில்லங்கம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.
கலைத்துறையினரின் கற்பனைத் திறன் கூடும். வியாபாரிகள் தொழில்முறையில் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். சரிசம பலன்களைக் காணும் மாதமாக அமையும்.
கும்பம்
இந்த மாதத்திய கிரக நிலை உங்கள் மனதில் மகிழ்ச்சியை பூரணமாக இடம்பெறச் செய்யும். நினைத்த காரியங்கள் நியாயமான முறையில் நடைபெறுவதன் மூலம் மன நிம்மதி கொள்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.
வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு கால நேரம் சாதகமாக அமையும். பொருள் வரவு நிலை சிறப்பாக இருந்து வரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். பிள்ளைகளின் செயல்களில் சுறுசுறுப்பினைக் காண்பீர்கள். சிந்தனைகளில் அவ்வப்போது தோன்றும் குழப்பத்தினைத் தவிர்க்க இயலாது.
ஆயினும் முக்கியமான பணிகளின் போது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கான கால நேரம் கூடி வரும்.
பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். இக்கட்டான சூழ்நிலையில் ஸ்திரீகளின் துணையோடு வெற்றி காண்பீர்கள். தொழில்முறையில் உங்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி வருவீர்கள்.
வியாபாரிகள் சிறப்பான தனலாபம் காணும் நேரம் இது. மாணவர்கள் தொழில்முறைக் கல்வியில் அதிக ஈடுபாடு கொள்வர். கலைத்துறையினர் ஜூலை மாதத்தில் தங்களுக்குரிய அங்கீகாரத்தை அடைவர். சாதகமான நற்பலன்களை விளைவிக்கும் மாதமாக அமையும்.
மீனம்
சற்றே சாதகமற்ற கிரஹ சஞ்சார நிலையை எதிர்கொண்டிருந்தாலும், நேரத்திற்குத் தக்கவாறு உங்கள் பணிகளை மாற்றியமைத்துக்கொண்டு செயலாற்றி வருவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிலையான முடிவெடுக்க இயலாது ஒருவித குழப்பமான மனநிலையை உணர்ந்து வருவீர்கள்.
ஆயினும் மனதின் மூலையில் நம்மால் எதையும் எதிர்கொள்ள இயலும் என்ற தைரியம் தொடர்ந்து இருந்து வரும். இதுநாள் வரை தடைபட்டிருந்த பொருள் வரவு நிலை சீரடையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் சேரும் நேரம் இது. தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த உபயோகத்தினைத் தரும் வகையில் அமையும்.
பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உறவினர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள்.
வாழ்க்கைத்துணை உங்களின் எண்ணத்தினைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருவார். குடும்பப் பெரியோர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உத்யோகஸ்தர்கள் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவி வரும்.
கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சிறிது காலம் காத்திருப்பது நல்லது. சரிசம பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

0 comments:

Post a Comment

எங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.

இலவச பதிவு - http://www.tamilsubavivaham.com/register