Showing posts with label Guru Peyarchi 2016. Show all posts
Showing posts with label Guru Peyarchi 2016. Show all posts

Sunday, 24 July 2016

குரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?

குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது.

குரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா? - Tamil Subavivaham.com


குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும்.

நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்டு மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18 ம் நாள், அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடைகின்றனர்.

மேலும், குரு வழிபாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறுகிறது. குரு பலம் இருந்தால்… சகல யோகமும் பெறலாம் என்பார்கள். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான்.



குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். அறிவு உடைய குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான். நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான்.

இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ,சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை.

வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும். குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும்.

நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார். குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.



குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள். குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும்.

அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும். குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும். குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம்.

நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும். குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும்.

மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வதை இல்லாமல் உடனே போகும். குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும்.

மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார். குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும்.

மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும். குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார்.

குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும். குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும்.

வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

Saturday, 23 July 2016

குரு பெயர்ச்சி 2016: திருச்செந்தூர் முருகனும்... குரு பகவானும்!

தூத்துக்குடி: குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.
நவகிரகங்களில் பிரஹஸ்பதி என்ற வியாழபகவான் மிகவும் பிரசித்திபெற்றவர். பிரகஸ்பதியை தேவர்கள் குருவாக ஏற்றனர்.
வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் 17ம் நூற்றாண்டில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. டச்சு நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கோவிலைக் கொள்ளையடித்தார்கள். அதுசமயம் தெற்குநோக்கி இருந்த ஆறுமுகப் பெருமானையும், விக்ரகங்களையும் தூக்கிக்கொண்டு கப்பலில் ஏறினர்.
அடுத்த சில மணிகளில் பெரும்புயலும், இடியும் மழையும் அவர்களைத் தாக்கின. அவர்கள் பயந்து முருகனின் திருவுருவச் சிலையையும், விக்ரகங்களையும் கடலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். காலையில் ஆலயம் வந்த பக்தர்கள் ஆண்டவனைக் காணாமல் துயரம் கொண்டனர்.
அந்த சமயம் ஒரு அற்புதம் நடந்தது. வடமலையப்ப பிள்ளை என்ற அடியவரின் கனவில் முருகன் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் கூறினார். உடனே வடமலையப்ப பிள்ளையும், பல பக்தர்களும் கடலில் குதித்து ஆறுமுகப் பெருமானைத் தேடினார்கள்.
முதலில் நடராஜர் சிலையையும், பிறகு ஆறுமுகப் பெருமானையும் கண்டெடுத்து ஆலயத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தனர். இன்று அந்த திருவுருவச் சிலைகளையே செந்திலாண்டவன் ஆலயத்தில் நாம் தரிசிக்கிறோம். இத்தலத்தில் குரு பகவானும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம்.



  • சூரபத்மன் வேட்டை

    தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். விளைவு, தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.
  • குருவின் கலக்கம்

    தேவர்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகிறான். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் குருபகவான்.
  • தவம் செய்த குரு

    அந்தக் காடு சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்தது. வேறு இடங்களில் தேடினாலும் தேடுவானே தவிர, தன் எல்லையில் குரு பகவான் இருப்பார் என்ற எண்ணம் சூரனுக்கு உதிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தக் காடு தனக்கு மிகப் பாதுகாப்பானது என்று கருதிய குரு பகவான், அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி, தவத்தில் மூழ்கினார்.
  • சிவன் தாண்டவம்

    அப்போது, அவரது ஞானக்கண்ணில் திருக்கயிலையின் காட்சிகள் விரிந்தன. ஆவேசமாக எழுந்து, கோபாக்னியுடன் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்.சிவனாரின் இந்த ருத்ர தாண்டவத்துக்குக் காரணம் இருக்கவே செய்தது. தவத்தின் பலனாக சிவனாரிடம் பல வரங்களும், இறவாத் தன்மையும் பெற்றிருந்தான் சூரபத்மன்.
  • சினம் கொண்ட சிவன்

    அதன் காரணமாக, சர்வ லோகங்களையும் ஆளும் பேறு கிடைத்தது அவனுக்கு. ஆனால் தகுதியற்றவனின் ஆட்சியில் நல்லவர்களும் ஞானிகளும் படும் பாடு சொல்லிலும் எழுத்திலும் அடங்காது அல்லவா? இங்கு தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பாடும் அப்படித்தான் இருந்தது. சூரபத்மனால் கொடுமையின் உச்சகட்டத்தை அனுபவிக்கத் தொடங்கினர். அதைப் பொறுக்க முடியாமல்தான் சினம் கொண்டுவிட்டார் சிவபெருமான்.
  • நெற்றிக்கண் திறந்த சிவன்

    அவரது நெற்றிக்கண் திறந்தது. அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதைக் கண்டு பார்வதிதேவி அச்சத்துடன் விலகி நகர, அவளுடைய கால் சிலம்பு சிதைந்து, அதிலிருந்த நவரத்தின மணிகள் தெறித்துத் தரையில் விழுந்தன.
  • 9 வீரர்கள்

    இந்த நவமணிகளின் மேல் தீப்பொறிகளின் ஒளிபட்டு ஏற்பட்ட பிரதிபலிப்பில் இருந்து நவ வீரர்கள் தோன்றினார்கள். அவர்கள் வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன்.
  • அவதரித்த ஆறுமுகன்

    அதே நேரம், சிவனாரின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டன. அங்கே அவை ஒன்றிணைந்து வீரகுமாரனாக உருவெடுத்தன. குமாரனுக்கு அருளாசி வழங்கிய சிவபெருமான், ''தேவர்களே, கலங்கவேண்டாம். இதோ எனது புத்திரனான வீரகுமார் முருகன், சுப்பிரமணியன், கந்தன் என்று போற்றப்படுவான்.
  • சூரபத்மனுடன் போர்

    இவன், சூரபத்மனை அழிக்கவே தோன்றியுள்ளான். நவமணிகளின் பிரதிபலிப்பில் தோன்றிய ஒன்பது பேரும் முருகனுடன் இணைந்து போரிட்டு, சூரபத்மனை வீழ்த்துவார்கள். அதற்கான காலம் கனிந்து விட்டது என்று அருளினார் சிவன்.
  • சூரனை வெல்ல ஆலோசனை

    கார்த்திகைப் பெண்கள் 6 பேர் ஆறுமுகனை வளர்க்க நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
  • ஆலோசனை சொன்ன குரு

    தேவாசுர யுத்தம் மூளப்போகிறது. தேவ சேனாதிபதியாக முருகவேள் நியமிக்கப் பட்டுவிட்டார். அவருக்குத் துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்கத் தயாராக இருந்தார்கள். மந்திர ஆலோசனை நடந்தது. தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.
  • குரு பகவானுக்கு அருள்

    அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம். ஏனெனில், நாம் இருவருமே இந்த உலகை, அதில் வாழும் மக்களை ஞானத்தில் ஏற்றி உய்விக்க வந்தவர்கள்.
  • துன்பம் நீக்குவோம்

    நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள். கருணை தவழும் முகமும், சத்துவமான சாந்த குணமும் கொண்டவர்கள். காவி உடை அணிந்த நாம் அடியவர்களின் துன்பத்தைப் போக்குபவர்கள். அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் நாம் தூய திருநீறு அணிந்திருப்பவர்கள்.யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும்'' என்று வரம் அளித்துச் சென்றார்.
  • அருள் புரியும் குரு பகவான்

    அதன்படி, குருபகவான் அங்கேயே தங்கினார். அதுமட்டுமின்றி, கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவேதான் குரு பரிகார தலமாக திருச்செந்தூரை பரிந்துரை செய்கின்றனர் ஜோதிடர்கள்.


  • Sunday, 17 July 2016

    குருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்!

    துன்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.
    குருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்
     (2-8-2016 முதல் 1-9-2017 வரை)

    துன்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது அருள் நமக்கு எப்பொழுதும் தேவை. அதனால் தான் நமது சான்றோர்கள் ‘குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள்’ கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் ராசிகள் மகரம், மீனம், ரிஷபம் ஆகியவையாகும். குரு தனாதிபதியாக விளங்கி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் மூலம், பணமழையில் நனைந்து பார்போற்றும் ராசியாக விளங்குவது விருச்சிகம். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருபார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசிகள் தனுசு, கும்பம், மேஷம். மேற்கண்ட ராசிகள் அனைத்திலும் இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. புதிய பாதை புலப்படும்! பொருள் வரவு பெருகும்! புகழ் கூடும்.

    மற்ற ராசிகளான மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் குரு பார்வை பதியும் இடங்களில் எல்லாம் நல்ல பலன்களைப் பெற்று ஆரோக்கியமான உடல்நிலையும், அனைவரும் பாராட்டும் வாழ்க்கையும் அமைத்துக் கொள்ள இயலும். மேலும் அந்த ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் குருவிற்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல இயலும்.

    இப்பொழுது கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். பிறகு அதிசாரமாக துலாம் ராசிக்குச் செல்கிறார். மீண்டும் கன்னி ராசிக்கு வந்து பலன் கொடுக்கிறார். அடுத்த குருப்பெயர்ச்சி 2.9.2017-ல் நிகழ உள்ளது. அப்பொழுது தான் குருபகவான் முறையாக துலாம் ராசிக்குச் செல்கிறார்.

    இதற்கிடையில் 27.2.2017-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவுமாக அப்பொழுது மாற்றம் பெறுவார்கள். அதுவரை ராகு-கேதுக்களின் ஆதிக்கம் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிகமாக இருக்கின்றது. மேற்கண்ட ராசிக்காரர்கள் சுய ஜாதகத்திற்கு ஏற்ப அனுகூலம் தரும் ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் கூடுதலாகக் கிடைக்கும்.

    நமது வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமானதாகும். ஆணும், பெண்ணும் இணைந்து வாழத் தொடங்கும் திருமண உறவை குருபலம் இருந்தால் தான் ஏற்க முடியும். குருபகவான் பச்சைக் கொடி காட்டினால் தான் மணக்கோலம் காண முடியும். வெற்றிகரமான வாழ்க்கைக்கு ‘வியாழநோக்கம்’ தான் வேண்டும்.

    இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக ஆன்மிகம் தழைக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். கன்னிராசியில் குரு வருவதால் குடங்களைச் சுமந்த பெண்கள் இனி மகுடங் களைச் சுமக்கப் போகிறார்கள். சாதம் படைத்த கைகள் வேதம் படைக்கப் போகின்றது. அம்மியில் அரைத்த கரங்கள் எல்லாம் இனி செம்மையாக அரசாளும் யோகத்தைப் பெறப் போகின்றன.

    எழுத்துத் துறை, பத்திரிகைத் துறை, ஜோதிடத் துறை, கலைத்துறை, இலக்கியத்துறை, சின்னத்திரை, வண்ணத்திரை, ஜவுளித்துறை, காகிதத் துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகப்படி குரு இருக்கும் பாதசார பலம் அறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோக பலம் பெற்ற நாளில் சிறப்புப் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

    கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் வக்ரகாலம்:

    16.1.2017-ல் குருபகவான் சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசிக்குச் செல்கின்றார். (அதிசாரம்)

    22.2.2017-ல் குரு துலாத்தில் வக்ரம் பெறுகின்றார்.

    அதிசாரம் முடிந்து மீண்டும் 10.3.2017-ல் குரு கன்னி ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்.

    1.6.2017-ல் குரு வக்ர நிவர்த்தியாகிறார்.

    2.9.2017-ல் துலாம் ராசிக்கு குருப்பெயர்ச்சியாகிச் செல்கிறார்.

    வழிபாட்டு ஸ்தலங்கள்!

    உள்ளூரில் உள்ள சிவாலயத்தில் உள்ள குருவையும், குருபீடமாக விளங்கும் திருச்செந்தூர், சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம், மடப்புரம் தட்சிணாமூர்த்தி, குருவித்துறை, ஆலங்குடி, திட்டை ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள்.

    Wednesday, 13 July 2016

    குரு பெயர்ச்சி 2016: குருவின் பார்வை கிடைக்க இங்கே போய் வழிபடுங்க!

    நவக்கிரகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் மாதம் ஒருமுறையும், சந்திரன் இரண்டே கால் நாளிலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், புதனும், சுக்கிரனும் ஒரு மாதத்திலும், குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் குரு பகவான். நவகிரகப் பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சிகள் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. குருப் பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம். குரு சன்னதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் மகா மகம் நடக்கிறது. இப்பொழுது குரு சிம்மத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரிமாதம் 22ம் தேதி மகாமகம் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 2ம் தேதி குரு பகவான் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைகிறார். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகார தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். •நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.




    •திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும்.
    •தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
    • முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம்.
    •மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.
    •திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது தேவூர் . இத்தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்றுபெயர். குருபகவான் வழிபட்ட தலம் இது. இங்கு குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    •கும்பகோணத்தில் மகாமகக் குளமான பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் கோயில் குரு பரிகாரத்திற்கு ஏற்ற கோயில். குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும், காசி விசாலாட்சி, தேனார் மொழி என்றும் அழைக்கிறார்கள்.
    •வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி' ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
    •மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.
    •சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணா மூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.
    •சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார்.
    •காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத் திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார்.
    •ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.
    •குருபகவானை வணங்க தனியாக பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தோறும் வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கு குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம்.
    எங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.

    இலவச பதிவு - http://www.tamilsubavivaham.com/register